yesuvae kalvaariyil ennai vaiththukkollum இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்
1. இயேசுவே கல்வாரியில் என்னை வைத்துக்கொள்ளும்
பாவம் போக்கும் இரத்தமாம் திவ்ய ஊற்றைக்காட்டும்
மீட்பரே, மீட்பரே, எந்தன் மேன்மை நீரே
விண்ணில் வாழுமளவும் நன்மை செய்குவீரே
2. பாவியேன் கல்வாரியில் இரட்சிப்பைப் பெற்றேனே
ஞானஜோதி தோன்றவும் கண்டு பூரித்தேனே
3. இரட்சகா, கல்வாரியின் காட்சி கண்டோனாக
பக்தியோடு ஜீவிக்க என்னை ஆள்வீராக