yesuvin anpinai ariviththida இயேசுவின் அன்பினை அறிவித்திட
இயேசுவின் அன்பினை அறிவித்திட
இணைந்தே செயல்படுவோம்
சுவிசே நற்செய்தி கூறிட
விரைந்தே புறப்படுவோம்
நம் பாரதம் நம் தாயகம் கர்த்தரை அறியட்டுமே
நம் தாய் மண்ணும் நம் தலைமுறையும்
இயேசுவை அறியட்டுமே
1. நினிவேயின் ஜனங்களுக்காக நம் தேவன் பரிதவித்தார்
தர்க்கன் யோனாவையோ அவர் அனுப்பி எச்சரித்தார்
இலட்சத்திற்காக பரிதபித்தார்
கோடிகட்காக கலங்கிடாரோ? – நம் பாரதம்
2. இமைக்கும் நொடி பொழுதிலே மரித்திடும் மாந்தரைப் பார்
பாவ மன்னிப்பின்றி ஆக்கினை அடைவதை பார்
திறப்பில் நின்று தடுத்திடுவோம்
ஜெபிக்கும் மக்களைத் திரட்டிடுவோம் – நம் பாரதம்
3. காலம் கடந்திடுதே நம் வேதமும் நிறைவேறுதே
இயேசுவின் வருகை இன்று அதி சமபமாகிறதே
இளைஞர் கூட்டம் இயேசுவுக்காய்
நற்செய்தி சுமந்து புறப்படுவோம் – நம் பாரதம்