yesuvin maarpinil இயேசுவின் மார்பினில் – சாருவேனே
இயேசுவின் மார்பினில் – சாருவேனே
துன்பம் துக்கம் கண்ணீர் – மறப்பேனே
1. காரிருள் மூடும் நேரத்தினில்
கர்த்தா உம் பாதம் அண்டி நின்றேன்
எந்தனை மீட்டிட உந்தனை
அன்பின் சொரூபி என் இயேசு நாதா
2. நீசச் சிலுவை மீதினிலே
என் பாவம் போக்கத் தொங்கினீரே
ஆருயிர் நாதனே எத்தனை வாதைகள்
என்னை நீர் மந்தையில் சேர்த்திடவே
3. கல்வாரி நாதா நின் இரத்தத்தை
சிந்தினீரே இப்பாவிக்காக
கைகால்கள் ஆணிகள் கடாவப்பட்டதே
முள்முடீ சூட்டியே நின் சிரசில்
4. ஜீவனைத் தந்த என் நேசரே
ஒப்புவித்தேன் என்னை உமக்காய்
கரத்தில் ஏந்தியே பொற்கிரீடம் சூட்டியே
விண்ணிலும் சேர்ப்பீரே பாவியென்னை