yesuvin naamame thirunaamam mulu இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இயேசுவின் நாமமே திருநாமம் – முழு
இருதயத்தால் தொழுவோம் நாமும்
சரணங்கள்
1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு
வாசித்த பேர்களுக்குக் குறையில்லையே — இயேசு
2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை
நித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம் — இயேசு
3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது
சத்திய விதேய மனமொத்த நாமம் — இயேசு
4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் – நமை
அண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம் — இயேசு
5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி – பெரும்
பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி — இயேசு