yesuvukke oppuviththen இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
யாவையும் தாராளமாய்
என்றும் அவரோடு தங்கி
நம்பி நேசிப்பேன் மெய்யாய்
ஒப்புவிக்கிறேன் ஒப்புவிக்கிறேன்
நேச ரட்சகா நான் யாவும்
ஒப்புவிக்கிறேன்!
2. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
அவர் பாதம் பணிந்தேன்
லோக இன்பம் யாவும் விட்டேன்
இப்போ தேற்றுக்கொள்ளுமேன்
3. இயேவுக்கே ஒப்புவித்தேன்
முற்றும் ஆட்கொண்டருளும்
நான் உம் சொந்தம் நீர் என்
சொந்தம்
சாட்சியாம் தேவாவியும்
4. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
நாதா அடியேனையும்
அன்பு பெலத்தால் நிரப்பி
என்னையும் ஆசீர்வதியும்
5. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
திவ்ய ஜ்வாலை வீசுதே
பூரண ரட்சை பேரானந்தம்
சதா ஸ்தோத்திரம் அவர்க்கே!