• waytochurch.com logo
Song # 26803

yogovaa nisi yogovaa nisi யேகோவா நிசி யேகோவா நிசி


யேகோவா நிசி யேகோவா நிசி
யேகோவா நிசியை
யேகோவா நிசியைஏற்றிப்பாடுவோம்
எங்கள் கொடி வெற்றிக்
கொடியே – ஆஹா
1. வீறுகொண்டெழுவீர்இயேசுவீரரே
மாறுகொண்டு மன்னர்
முன்னே செல்கிறார்
சீறியெழும் சிங்கங்கள்
நாம் அல்லவோ
மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா!
2. கர்த்தர் துணை நின்று
யுத்தம் செய்வாரே
கலங்கி நிற்க காரணங்கள் இல்லையே
கைகளைத் தளர்த்திடாமல் தாங்கியே
கர்த்தர் இயேசு சத்யஆவி நிற்கிறார்
3. ஆவியில் நிறைந்து
ஜெபம் செய்வோமே
ஆயுதங்கள் அணிந்து
களம் செல்வோமே
ஆர்ப்பரித்தலங்கமதை வீழ்த்தியே
ஆவிகளின் சேனைகளை
வெல்லுவோம் கொடிகள் ஏந்தும்
படைகள் அல்லவோ?
4. சத்ரு வெள்ளம் போல
ஏறி வருகிறான்
சத்ய ஆவி வேகம்
கொடியை ஏற்றுவார்
கோலியாத்தின் வேஷம்
இங்கே செல்லுமா?
கோஷமிடும் இளைஞரின்
முன் நில்லுமா?
கர்த்தர் நாமம் வல்லகோட்டையே
5. நமக்கிருக்கும் இந்த பெலன்
போதுமே நாதன் இயேசு
அனுப்புவதால் போவோமே
பட்டயமோ புயபலமோ
தேவையா? பரமே தேவ ஆவி
நம்மில் இல்லையா? ஜீவ தேவ
சேனையல்லவோ?
5. முடிந்தென்று முழங்கி நிற்கும்
வீரனே முற்றும் அவனை
முறியடித்து தீரனே சிலுவையில்
சிரம் நசித்த சீலனே
சிலுவைக்கொடியை ஏற்றும்
தேவபாலனே!
வெற்றி வாகை சூட்டிப்
பணிகிறோம்

yaekovaa nisi yaekovaa nisi
yaekovaa nisiyai
yaekovaa nisiyaiaettippaaduvom
engal koti vettik
kotiyae – aahaa
1. veerukonndeluveeryesuveerarae
maarukonndu mannar
munnae selkiraar
seeriyelum singangal
naam allavo
meerum ethiri sathikalukku miralavaa!
2. karththar thunnai nintu
yuththam seyvaarae
kalangi nirka kaaranangal illaiyae
kaikalaith thalarththidaamal thaangiyae
karththar yesu sathyaaavi nirkiraar
3. aaviyil nirainthu
jepam seyvomae
aayuthangal anninthu
kalam selvomae
aarppariththalangamathai veelththiyae
aavikalin senaikalai
velluvom kotikal aenthum
pataikal allavo?
4. sathru vellam pola
aeri varukiraan
sathya aavi vaekam
kotiyai aettuvaar
koliyaaththin vaesham
ingae sellumaa?
koshamidum ilainjarin
mun nillumaa?
karththar naamam vallakottaைyae
5. namakkirukkum intha pelan
pothumae naathan yesu
anuppuvathaal povomae
pattayamo puyapalamo
thaevaiyaa? paramae thaeva aavi
nammil illaiyaa? jeeva thaeva
senaiyallavo?
5. mutinthentu mulangi nirkum
veeranae muttum avanai
muriyatiththu theeranae siluvaiyil
siram nasiththa seelanae
siluvaikkotiyai aettum
thaevapaalanae!
vetti vaakai soottip
pannikirom

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com