உம்மை நேசித்து
Ummai Nesithu Davidsam Joyson John Rohith
உம்மை நேசித்து நான் வாழ்ந்திட
உங்க கிருபை தாருமே
உம்மை வாஞ்சையாய் என்றும் தொடர்ந்திட
உங்க கிருபை தாருமே
என்னை அழைத்தவரே
உம்மை என்றென்றும் ஆராதிப்பேன்
உண்மை உள்ளவரே
உம்மை என்றென்றும் துதித்திடுவேன்-2
-உம்மை நேசித்து
1.வேண்டான்னு கிடந்த எந்தன் வாழ்வை
வேண்டும் என்றீரே
கைவிடப்பட்ட என்னையும்
ஒரு பொருட்டாய் எண்ணினீரே-2
இயேசுவே உந்தன் அன்பையே பாடிடுவேன்
இயேசுவே உந்தன் கிருபையை உயர்த்திடுவேன்-2
2.இருளாய் கிடந்த எந்தன் வாழ்வில்
இரட்சிப்பை தந்தீரே
அநேகர் வாழ்வை வெளிச்சமாய் மாற்றும்
விளக்காய் வைத்தீரே-2-இயேசுவே
3.நிலையில்லாத எந்தன் வாழ்வில்
நிலையாய் வந்தீரே
நித்தியமான வீட்டை குறித்து
நம்பிக்கை தந்தீரே-2-இயேசுவே

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter