yesu swamy இயேசு ஸ்வாமி
இயேசு ஸ்வாமி,உமது
வசனத்தின் பாலைத் தேட
வந்தோம்; எங்கள் மனது
மண்ணைவிட்டு உம்மைச் சேர
எங்கள் சிந்தையை நீர் முற்றும்
தெய்வ சொல்லுக்குட்படுத்தும் .
உமதாவி யெங்களில்
அந்தகாரத்தை அறுத்து
ஒளியை வீசிராகில்,
புத்திக் கண்ணெல்லாம் இருட்டு ;
சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு
உம்முடைய நடப்பிப்பு .
மகிமையின் ஜோதியே ,
ஸ்வாமி , நாங்கள் மாயமற
பாடிக் கெஞ்சி , நெஞ்சிலே
வசனத்தைக் கேட்டுணர
வாய் செவி மனமும் கண்ணும்
திரவுண்டுபோகப் பண்ணும்.