yesukka ennai muttrum இயேசுவுக்கா யென்னை முற்றும்
1. இயேசுவுக்கா யென்னை முற்றும் தத்தஞ் செய்தேனே!
நேசித் தவரோடு என்றும் சுகித்திருப்பேனே!
2. லோக ஆசா பாசமெல்லாம் நான் வெறுத்தேனே;
ஏகனே! யேசுவே! என்னை ஏற்றுக் கொள் கோனே!
3. என்னை உந்தன் சொந்தமாக ஆக்கிக்கொள்வாயே;
உன்னைச் சேர்ந்தோனென்றுன்னாவி சொல்லச் செய்வாயே!
4. மீட்பா! உனதன்பா லென்னை நிறைத்து வைப்பாயே
தீட்பில்லாதுன் ஆசி என்மேல் தரிக்கச் செய்வாயே!
5. பூரண இரட்சையளித்தீர் போற்றுகின்றேனே;
தாரணியி லுன் சேவையைத் தான் புரிவேனே