thotharikirean naan தோத்திரிக்கிறேன் நான்
பல்லவி
தோத்திரிக்கிறேன் நான் தோத்திரிக்கிறேன்;-தேவ
சுந்தரக் கிறிஸ்துவேந்தைத் தோத்திரிக்கிறேன்.
சரணங்கள்
1. க்ஷேத்திரத்தொரே யோவாவைத் தோத்திரிக்கிறேன்,-கன
திவ்விய திரித்துவத்தைத் தோத்திரிக்கிறேன்;
பாத்திரமாக்கிக் கொண்டோனைத் தோத்திரிக்கிறேன்;-உயர்
பரமண்ட லாதிபனைத் தோத்திரிக்கிறேன்;
நேத்திரக் க்ருபாநதியைத் தோத்திரிக்கிறேன்;-சதா
நித்திய மகத்துவத்தைத் தோத்திரிக்கிறேன்;
கோத்திரத் திஸராவேலைத் தோத்திரிக்கிறேன்;-யூதர்
கொற்றவனைப் பெற்றவனைத் தோத்திரிக்கிறேன். – தோத்
2. அண்டர்களி னாயகனைத் தோத்திரிக்கிறேன்;-அதற்கு
அப்புறத்தை அப்புறத்தைத் தோத்திரிக்கிறேன்;
மண்டலமெலாமறியத் தோத்திரிக்கிறேன்;-முழு
வானவரும் பார்த்து நிற்கத் தோத்திரிக்கிறேன்;
தெண்டனிட்டுத் தெண்டனிட்டுத் தோத்திரிக்கிறேன்;-
மனச் சிந்தையினால், விந்தையினால் தோத்திரிக்கிறேன்;
தொண்டனடி யேனென்று தோத்திரிக்கிறேன்;-என்றன்
துன்பமெல்லாந் தீருமென்று தோத்திரிக்கிறேன். – தோத்