nantri baligal seluthiyae நன்றி பலிகள் செலுத்தியே
நன்றி பலிகள் செலுத்தியே நான்
உன்னதரை போற்றிடுவேன்
நன்மை என்றுமே செய்பவரை
நாள் எல்லாம் உயர்த்திடுவேன்-2
எந்தன் இராஜாதி இராஜன் அவர்
சர்வ லோகத்தை ஆள்கிறவர்
எல்லா மகிமைக்கும் மேலானவர்
என் வாழ்க்கையின் வெளிச்சம் அவர்-2
1.நாட்கள் எல்லாம் அழகானதால்
படைத்தவரே என்றும் துதிப்பேன்-2
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னை தொடரும்-2-எந்தன் இராஜாதி
2.என் காலங்கள் பெலன் உள்ளதால்
வல்லமையால் நிரப்பினீரே-2
குறைவில்லாத செல்வங்களை
என் கையில் கொடுத்துவிட்டீர்-2-எந்தன் இராஜாதி
3.இளைப்படையாமல் எழும்ப செய்தீர்
கழுகைப்போல என்னை உயர செய்தீர்-2
தந்தையாக என்னோடிருந்து
புதியன எனக்கு செய்தீர்-2-எந்தன் இராஜாதி