• waytochurch.com logo
Song # 26891

neer pothume yesuve இயேசுவே நீர் போதுமே


இயேசுவே நீர் போதுமே எப்போதுமே
நீர் இல்லா வாழ்வு
அது வீணாய் போனது
நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது

தனிமையின் பாதையில் தவித்திடும் வேளையில்
தாயைப்போல் என்னை தேற்றினீர்
சோதனை நேரத்தில்
சோர்ந்து நான் போகையில்
தூக்கியே தோளில் சுமந்தீர்
தாயின் கருவில் கண்டவரே
தாங்கி என்னை சுமந்தவரே
தரணியில் தஞ்சம் என்றும் நீர்தானையா
நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது
நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது

மரணத்தின் பாதையில்
மனந்தளர்ந்த நேரத்தில்
மருத்துவராய் வந்தீர்
மறுரூபமாக்கிட மகிமையில் சேர்த்திட
மணவாளனாய் வருவீர்
விண்ணை விட்டு மண்ணில் வந்தீர்
என்னை மீட்க ஜீவன் தந்தீர்
இயேசுவே உந்தன் அன்பு ஒன்றே போதுமே
நீர் இல்லா வாழ்வு அது வீணாய் போனது
நீர் இல்லாமல் நான் எங்கே வாழ்வது

yesuvae neer pothumae eppothumae
neer illaa vaalvu
athu veennaay ponathu
neer illaamal naan engae vaalvathu

thanimaiyin paathaiyil thaviththidum vaelaiyil
thaayaippol ennai thaettineer
sothanai naeraththil
sornthu naan pokaiyil
thookkiyae tholil sumantheer
thaayin karuvil kanndavarae
thaangi ennai sumanthavarae
tharanniyil thanjam entum neerthaanaiyaa
neer illaa vaalvu athu veennaay ponathu
neer illaamal naan engae vaalvathu

maranaththin paathaiyil
mananthalarntha naeraththil
maruththuvaraay vantheer
maruroopamaakkida makimaiyil serththida
manavaalanaay varuveer
vinnnnai vittu mannnnil vantheer
ennai meetka jeevan thantheer
yesuvae unthan anpu onte pothumae
neer illaa vaalvu athu veennaay ponathu
neer illaamal naan engae vaalvathu

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com