maargazhi kuliril மார்கழி குளிரில்
மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் மனதுக்குள் ஒருவித உற்சாகம்
மனுக்குலம் மீட்க மரியன்னை மடியில் இறைமகன் பிறந்தார் சந்தோசம்
மின்மினுக்கும் நடத்திரம் போலவே – லலலா
நெஞ்சமெல்லாம் உவகையால் ஜொலிக்குதே – லலலா
விண்ணில் தூதர் இன்னிசை பாடவே – லலலா
வார்த்தை மனுவாய் ஆனாரே
Happy Happy Happy Happy Christmas
Merry Merry Merry Merry Christmas – 2
( I )
அகிலம் படைத்த இறைவன் இன்று மனிதனாய் தொழுவில் பிறந்தார்
இருளின் மாந்தர் ஓளியை காண விடியலாய் புவியில் உதித்தார்
அந்த இனிய நன்னாளிது / உள்ளம் மகிழும் பொன்னாளிது
மின்மினுக்கும் நடத்திரம் போலவே …
( II )
இளந்தளிரே வெள்ளி நிலவே உந்தன் புன்னகை கொள்ளை அழகு
பட்டுப்பூவே மெட்டு இசைப்பேன் சின்ன பாலனே கண்ணுறங்கு
உந்தன் சிரிப்பில் துயரம் மறப்பேன் உந்தன் பிறப்பால் மீட்ப்பை அடைவேன்
மின்மினுக்கும் நடத்திரம் போலவே …