muththirai mothiramae முத்திரை மோதிரமே
முத்திரை மோதிரமே
என் இதயத்தின் முத்திரையே
பாதை காட்டியே பாதுகாப்பேனே
என் பிரியமே நீ கலங்காதே (2
உள்ளங்கையில் இருக்கின்றாய் நீ
எவரும் பறிக்க முடியாதே (2)
எந்தன் நீதியின் வலங்கரத்தாலே
உன்னை தாங்கி நடத்துவேன்
பிரியமே நீ பயப்படாதே (2)
உந்தன் கண்ணீர் வேதனைகள்
வருத்தம் யாவும் அறிவேன் நான் (2)
எந்தன் கரமே உன்னை தேற்றும்
மகிழ்ச்சியால் உன்னை நிரப்புவேன்
பிரியமே நீ பயப்படாதே (2)
உந்தன் கரத்தை நான் பிடித்தேன்
உண்மையாய் உன்னை நடத்துவேன்
உன்னை எனக்காய் அர்ப்பணித்தாயே
உன்னை எனக்காய் நியமித்தேன்
பிரியமே நீ எனக்கே சொந்தம் (2)