• waytochurch.com logo
Song # 26897

akkini abishegam thanthu அக்கினி அபிஷேகம் தந்து


அக்கினி அபிஷேகம் தந்து
ஆவி பொழிந்திடும்
1. சுட்டெரிக்கும் நல் அக்கினி
சுத்திகரிக்க எம்மையும்
குற்றங்குறைகள் மற்றுங் கறைகள்
முற்றிலும் நீக்கிடுமே – எம்மில் – அக்கினி
2. பற்றினதே வான் அக்கினி
பக்தன் எலியா கூப்பிட
வேண்டுதல் கேட்டு வானந் திறந்து
வல்லமை ஊற்றிடுமே – இன்று – அக்கினி
3. மோசேயுங் கண்ட அக்கினி
முட்செடி மேலே பற்றிட
அற்புத காட்சி தற்பரன் மாட்சி
அண்டிட தந்திடுமே அதை – அக்கினி
4. நாதாப் அபியூ அக்கினி
நாடி அழிந்தால் நஷ்டமே
அந்நிய தீயை பட்சிக்கும் தேவ
ஆவியே வந்தாளும் – நல்ல – அக்கினி
5. மேலறை வந்த அக்கினி
சீஷரை அன்று சந்திக்க
பற்பல பாஷை பேசி மகிழ்ந்த
பக்தி வரம் தாரும் – தேவ – அக்கினி
6. இரண்டு மடங்கு அக்கினி
இந்த கடைசி நாட்களில்
மாம்சமான யாவரின் மேலும்
மாரியுடன் பொழியும் – பின் – அக்கினி

akkini apishaekam thanthu
aavi polinthidum
1. sutterikkum nal akkini
suththikarikka emmaiyum
kuttanguraikal mattung karaikal
muttilum neekkidumae – emmil – akkini
2. pattinathae vaan akkini
pakthan eliyaa kooppida
vaennduthal kaettu vaanan thiranthu
vallamai oottidumae – intu – akkini
3. moseyung kannda akkini
mutchedi maelae pattida
arputha kaatchi tharparan maatchi
anntida thanthidumae athai – akkini
4. naathaap apiyoo akkini
naati alinthaal nashdamae
anniya theeyai patchikkum thaeva
aaviyae vanthaalum – nalla – akkini
5. maelarai vantha akkini
seesharai antu santhikka
parpala paashai paesi makilntha
pakthi varam thaarum – thaeva – akkini
6. iranndu madangu akkini
intha kataisi naatkalil
maamsamaana yaavarin maelum
maariyudan poliyum – pin – akkini

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com