kaedagam neer thanaeg maj
G maj
கேடகம் நீர் தானே
என் பெலனும் நீர் தானே
துயரங்கள் என்னை சூழ்ந்திட்டபோதும்
வாழவைப்பவரே
கேடகமே அடைக்கலமே
நாம் நம்பும் கன்மலையே
நாம் நம்பும் கன்மலையே
கண்ணீரை துருத்தியில் வைத்து
பதில் தரும் நல்தேவனே
ஏற்ற நேரத்தில் கண்ணீருக்கு
பதில் தந்து காப்பவரே
கூப்பிடும் போது மறு உத்தரவு
கொடுத்திடும் நல் தேவனே
ஆத்துமாவிலே பெலன் தந்து
என்னைத் தைரியப்படுத்தினீரே
துன்பத்தின் நடுவில் நடந்தாலும்
என்னை உயிர்ப்பிக்கும் நல்தேவனே
எனக்காக யாவையும்
செய்து முடிப்பவரே