en uthadu ummai thuthikkumd maj t
D maj, 3/4, T-140
என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
உம் சமுகம் மேலானது
உயிரினும் மேலானது
1.நீர் எனக்கு துணையாய் இருப்பதால்
உம் நிழலில் அகமகிழ்கின்றேன் (சங் 63:7)
இறுதிவரை உறுதியுடன்
உம்மையே பற்றிக்கொண்டேன்
தாங்குதையா உமது கரம் (சங் 63:8)
என் உதடு உம்மை துதிக்கும்
ஜீவனுள்ள நாட்கள் எல்லாம்
2.என் தகப்பன் நீர்தானையா (சங் 63:1)
தேடுகிறேன் அதிகமதிகமாய்
ஜீவன் தரும் தேவநிதி வற்றாத நீரூற்று
உம்மில் நான் தாகம் கொண்டேன்
3.அறுசுவை உணவு உண்பதுபோல்
திருப்தி தினம் அடைகின்றேன்
ஆனந்த களிப்புள்ள (சங் 63:5)
உதடுகளால் துதிக்கின்றேன்
ஆனந்தம் ஆனந்தமே