ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
வான தூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெரும்
மன்னவனே உமக்கு 
 நின் உதிரமதினால் திறந்த நின்
ஜீவப் புது வழியாம்
நின்னடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம் 
 இத்தனை மகத்துவமுள்ள பதவி இப்
புழுக்களாம் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம் 
 இன்றைத் தினமதிலும் ஒருமித்துக்
கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக
உமக்கென்றும் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே 
 நீரல்லால் எங்களுக்குப் பரலோகில்
யாருண்டு ஜீவநாதா
நீரேயன்றி இகத்தில் வேறே ஒரு
தேட்டமில்லை பரனே 

 WhatsApp
 WhatsApp Twitter
 Twitter