• waytochurch.com logo
Song # 26955

ஸ்தோத்திர துதி மகிமை எந்நாளும் என் கர்த்தருக்கே


புது ஜீவன் புது பெலன் புது கிருபை

புதிய நல் ஆவியும் அளித்தாரே

பழையவைகள் ஒழிந்தனவே

புதுமையாய் மாற்றினாரே - ஸ்தோத்திர
கண்களும் கர்த்தரை நோக்கிடவே

பரத்தின் ஒத்தாசை அளித்தாரே

இராப்பகலாய் கண்ணுறங்காமல்

காத்திடுமி கர்த்தரவர் - ஸ்தோத்திர
நன்மையும் கிருபையும் தொடர்ந்திடவே

நீதியின் பாதையில் நடத்தினாரே

புது எண்ணெயால் அபிஷேகித்து

பாத்திரம் நிரம்பச் செய்தார் - ஸ்தோத்திர
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

நன்றியினால் உள்ளம் நிறைந்திடுதே

ஜீவன் என்னில் நிலைத்திருக்கும் வரை

என் தேவனைத் துதித்திடுவேன் - ஸ்தோத்திர

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com