விழித்தெழு விசுவாசியே நீ விழித்துக் கண்களை ஏறிட்டுப் பார்
எருசலேமின் அலங்கத்தைப் பார்
தெருக்களின் அலங்கோலத்தைப் பார்
நொறுங்கி ஜெபித்து விரும்பி நீயும் வா
விரும்பி அலங்கத்தை கட்டிட வா - விழி
பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை
ஆவியின் நிரப்புதல் பெற்றேர் தேவை
பாவியின் சாவை கூவி உரைக்கும்
ஆவி பெற்ற பரிசுத்தர் தேவை - விழி
அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன்
அற்பனே ஆயினும் ஏற்றுக் கொள்ளும்
அறுவடை பணியை கருத்துடன் செய்ய
தருகிறேன் என்னை ஏற்றுக் கொள்ளும் - விழி