• waytochurch.com logo
Song # 26960

விளைந்த பலனை அறுப்பாரில்லை விளைவின் நற்பலன் வாடிடுதே


அவர் போல் பேசிட நாவு இல்லை

அவர் போல் அலைந்திட கால்கள் இல்லை

எண்ணிலடங்கா மாந்தர் சத்தம்

உந்தன் செவியினில் தொனிக்கலையோ- விளைந்த
ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்

ஆயிரமாயிரம் அழிகிறாரே

திறப்பின் வாசலில் நிற்பவர் யார்?

தினமும் அவர் குரல் கேட்கலையோ - விளைந்த
ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்

ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்

விரைந்து சென்று சேவை செய்வாய்

விளைவின் பலனை அறிந்திடுவாய் - விளைந்த
ஒருமனம் ஒற்றுமை ஏகசிந்தை

சபைதனில் விளங்கிட செயல்படுவாய்

நிமிர்ந்து நிற்கும் தூண்களைப்போல்

நிலைவரமாய் என்றும் தாங்கி நிற்பார் - விளைந்த
ஆவியின் வரங்கள் ஒன்பதனை

ஆவலுடன் நீயும் பெற்றிடுவாய்

சபையின் நன்மைக்காய் உபயோகிப்பாய்

சந்ததம் சபையினில் நிலைத்திருப்பாய் - விளைந்த
தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்

உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்

கர்த்தர் நாட்டின தோட்டத்திலே

கடைசிவரை நீயும் கனி கொடுப்பாய் - விளைந்த

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com