• waytochurch.com logo
Song # 26967

வாழ்த்துகிறேன் இயேசு ராஜா வாழ்த்துகிறேன் இக்காலையிலே


உமது செட்டை நிழலதிலே படுத்திருந்தேன் இராமுழுதும்

உமது கரம் அணைத்திடவே ஆறுதலாம் நித்திரையும்
நித்திரையை இன்பமாக்கி பத்திரமாய் இருதயத்தை

சுத்தமான இரத்தத்திற்குள் சுத்தமாக வைத்திருந்தீர்
பலவிதமாம் சோதனைகள் ஏமைச்சூழ வந்திருந்தும்

ஒன்றும் எமை அணுகாமல் அன்புடன் பாதுகாத்தீர்
சந்திப்பீரே இக்காலைதனில் தந்திடவே திருவரங்கள்

சந்தோஷமாய் பகல் முழுதும் ஆவிக்குள் யான் பிழைக்க
தந்திடுவீர் அபிஷேகம் புதிதாக இப்புது நாளில்

நடந்திடுவீர் ஆவியினால் உமது திருச்சித்தமதில்
பாவமேதும் அணுகாமல் பரிசுத்தமாய் பாதை செல்ல

தேவையான சர்வாயுதங்கள் தாரும் ஜெப ஆவியுடன்
படைக்கிறேனே எந்தனையே பலி பீடத்தில் முற்றுமாக

கண்களுடன் செவியோடு வாயும் கையும் காலுமாக
செய்வேன் யான் எப்போதும் உம் சித்தமே ஆசையுடன்

ஒழித்திடுவேன் வீண் வார்த்தை பேசிடுவே னும்வாக்கை
எனைக் காண்போர் உமைக் காண உம் சாயல் எனிலீயும்

தந்திடுவீர் தாழ்மையையும் பொறுமையுடன் அன்புமாக

1
இயேசுவே உம் திருவருகை இந்நாளில் இருந்திடினும்

நேசருமைச் சந்திக்கவே ஆயத்தமாய் வைத்திடுமே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com