• waytochurch.com logo
Song # 26969

வாருமே பரிசுத்த ஆவியானவரே வந்து எங்களை நீர் மாற்றிடுமே


மற்றோரை குறை சொல்லுதல்

நீர் வந்தாலே ஓடிவிடும்

அன்பினால் நிறைந்திடுவேன்

நாவை நான் காத்திடுவேன்

உன் அபிஷேகத்தினால்

நாவை நான் காத்திடுவேன் - வாருமே
தீய எண்ணம் ஓடிவிடும்

கிறிஸ்துவின் சிந்தை வரும்

ஆத்தும பாரத்தினால்

அனுதினம் ஜெபித்திடுவேன்

ஆவியானவருடன் நான்

அனுதினம் ஜெபித்திடுவேன் - வாருமே
சுய நலம் மறைந்து விடும்

பிறர் நலம் வந்து விடும்

மற்றோரின் குறைவதிலே

உதவிடும் சிந்தை வரும்

உம் அபிஷேகத்தினால்

உதவிடும் சிந்தை வரும் - வாருமே
வெற்றியும் செழிப்பின் வாழ்வும்

நீர் வந்தாலே வந்து விடும்

வேதத்தை தியானிப்பேனே

புத்தியால் நடந்திடுவேன்

உம் அபிஷேகத்தினால்

புத்தியால் நடந்திடுவேன் - வாருமே
வல்லமை பெலனும் என்னில்

நீர் வந்தாலே வந்து விடும்

வெடித்து சிதறிடுவேன்

உலகெங்கும் சென்றிடுவேன்

நற்செய்தி சொல்லிடுவேன்

நற்பெயர் பெற்றிடுவேன் - வாருமே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com