• waytochurch.com logo
Song # 26970

வாரும் தேவா வான சேனைகளுடனே வந்து வரமருள் அளித்திடுமே


பாவம் அகற்றினீரே - உந்தன்

பாதம் பணிந்திடுவேன் எந்தன்

பரிசுத்தர் போற்றிடும் பரம தேவா

தரிசிக்கத் திருமுகமே - வாரும்
ஆதி அன்பிழந்தே மிக

வாடித் தவித்திடுதே ஜனம்

மாமிசமானவர் யாவரிலும்

மாரியைப் பொழிந்திடுமே - வாரும்
அற்புத அடையாளங்கள் - இப்போ

அணைந்தே குறைந்திடுதே - வல்ல

ஆதி அப்போஸ்தலர் காலங்களின்

ஆதிசயம் நடத்திடுமே - வாரும்
கறைகள் நீக்கிடுமே திருச்

சபையும் வளர்ந்திடவே எம்மில்

விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை

விரைந்தெங்கும் எழுப்பிடுமே - வாரும்
கிருபை பெருகிடவே - உம்

வருகை நெருங்கிடுதே ஶி மிக

ஆத்ம மணவாளனைச் சந்திக்கவே

ஆயத்தம் அளித்திடுமே - வாரும்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com