• waytochurch.com logo
Song # 26977

வான் புறாவே எங்கள் மீதில் வந்தமர்ந்திடும் வன் செட்டைகள் விரித்தே எம் அ


ஆவியின் அக்கினியால் தரிசித்திட

அனலுள்ள இருதயம் அளித்திடவே

அன்பினால் அணைத்தோடும் கனலடைய

அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே

ஊற்றிடுமே உமதாவியை

மாற்றிடுமே உம்மைப் போலவே - வான்
சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய

மாய்ந்திடும் சரீரங்கள் உயிரடைய

ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே

அண்டி வரும் எமக்கு நின் ஜெயம்தாருமே

ஊற்றிடுமே உமதாவியை

மாற்றிடுமே உம்மைப் போலவே - வான்
பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க

அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க

நற்செய்கையாம் நவ சிருஷ்டியிதில்

பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுமே

ஊற்றிடுமே உமதாவியை

மாற்றிடுமே உம்மைப் போலவே - வான்
நேசரே நினைத்திடாத வேளை வருவீர்

சேர்த்திட தூயவரை உமதுடனே

வேளையும் காலமும் சாயுமுன்னே

வேலையிது தீர கனிந்திறங்கிடுமே

ஊற்றிடுமே உமதாவியை

மாற்றிடுமே உம்மைப் போலவே - வான்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com