• waytochurch.com logo
Song # 26984

வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே வல்ல ஆண்டவர் இயேசுவண்டை


வாழ் நாளையெல்லாம் வீண்நாளாய்

வருத்தத்தோடே கழிப்பது ஏன்

வந்தவர் பாதம் சரணடைந்தால்

வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார் - வரு
கட்டின வீடும் நிலம் பொருளும்

கண்டிடும் உற்றார் உறவினரும்

கூடுவிட்டு உன் ஆவி போனால்

கூட உன்னோடு வருவதில்லை - வரு
அழகு மாயை நிலைத்திடாதே

அதை நம்பாதே மயக்கிடுமே

மரணம் ஓர் நாள் சந்திக்குமே

மறவாதே உன் ஆண்டவரை - வரு
தீராத பாவம் வியாதியையும்

மாறாத உந்தன் பெவீனமும்

கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்

காயங்களால் நீ குணமடைய - வரு
சத்திய வாழ்கை நம்பியே வா

நித்திய ஜீவன் உனக்களிப்பார்

உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்

உண்மையாய் இன்று எழுதிடுவார் - வரு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com