வனாந்திர யாத்திரையில் களைத்து நான் சோர்ந்து போகும் நேரங்களில்
செங்கடல் எதிர்த்து வந்தும்
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுதே
விடுவிப்பார் ஆண்டவர்
நல்குவார் புது பெலன்
அழிந்து மாளுவார் - (2) - வனாந்திர
தேவனை மறக்க செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது - (2)
மாராவின் கசந்த நீர்
மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட
வெளிச்சம் தோன்றுமே - (2) - வனாந்திர
இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமையென்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாம் மன்னாவை
வருஷிக்க பண்ணுவார்
இனியெனக் கென்றுமே
தாழ்வு இல்லையே - (2) - வனாந்திர