மோட்ச வீட்டை நான் என்று சேர்வேன் தூய தூய தேவா
பொற்றள வீதியில் உலாவுவேன்
பொன் மாளிகையில் நான் தங்கிடுவேன்
முள் முடி சூடின இயேசுவை
பொன் முடி சூட்டி நான் போற்றிடுவேன் - அல்லேலூயா
கண்ணீர்கள் யாவும் கர்த்தர் தாமே
கனிவுடன் கரத்தால் துடைப்பாரே
நல்ல போராட்டம் என் ஓட்டமும்
நலமுடன் ஓடி முடித்திடுவேன் - அல்லேலூயா
புதிய எருகலேம் வாசல்கள்
பூரிப்புடன் என்னை அழைக்குதே
எண்ணிலா பக்தர்கள் தூதர்கள்
என்னரும் இயேசுவையும் காணுவேன் - அல்லேலூயா
கல்லறை தோட்டம் அங்கே இல்லை
குறுகின ஆயுசுள்ளோர் அங்கில்லை
சாவு பவனி அங்கே இல்லை
சஞ்சலம் பஞ்சமும் அங்கே இல்லை - அல்லேலூயா
புவி யாத்திரை முடியும்போது
பதீசியில் சென்றிளைப்பாறவேன்
எக்காளம் தொனிக்கும் நேரத்தில்
எழும்பி என் பங்கை நான் பெற்றிடுவேன் - அல்லேலூயா
ஜீவ புஸ்தகம் திறந்திடும்
ஜீவ தேவன் என்னைக் கூப்பிடுவார்
ஜீவனுக்குள் பிரவேசித்து
ஜீவனுள்ளோர் தேசத்தில் நடப்பேன் - அல்லேலூயா