மோட்ச யாத்திரை செல்கிறோம் மேலோக வாசிகள் இம் மாய லோகந் தாண்டியே எம் வீ
சத்திய சுவிசேஷம் எடுத்துரைப்போமே ஶி தம்
நித்திய ராஜ்ஜிய மக்களை ஆயத்தமாக்கவே
தேசமெங்குமே அலைந்து செல்கிறோம்
நேசர் இயேசு வாக்குரைகள் நம்பியே - ஆனந்தமே
அள்ளி தூவிடும் விதை சுமந்து செல்கிறோம் - தம்
அண்ணல் ஏசுவின் சமூகம் முன்னே செல்லுதே
கண்ணீர் யாவுமே கடைசி நாளிலே
கர்த்தரே துடைத்தெம்மை தேற்றுவார் - ஆனந்தமே
மேகஸ்தம்பம் அக்கினி வெளிச்சம் காட்டியே
ஏகமாய் வனாந்தர வழி நடத்துவார்
இலக்கை நோக்கியே தவறிடாமலே
இப்புவி கடந்து அக்கரை சேர்வோம் - ஆனந்தமே
கர்த்தர் என் அடைக்கலம் கவலையில்லையே - இக்
கட்டு துன்ப நேரமோ கலக்கமில்லையே
கஷ்டம் நீக்குவார் கவலை போக்குவார்
கைவிடாமல் நித்தமும் நடத்துவார் - ஆனந்தமே
ஆரவாரத் தோடெம்மை அழைத்துச் சென்றிட - தம்
ஆவலோடு வானிலே தூதர்கள் சூழ்ந்திட
காக்க வல்லவர் நல் வாக்குரைத்தவர்
காகள தொனியுடன் வருகிறார் - ஆனந்தமே