மேக மீதினில் வேகமுடன் மேசியா ஏசுவே வந்திடுவார்
மின்னலைப் போன்ற பேரொளியில்
மத்திய வானில் தோன்றிடுவார்
எண்ணிலடங்கா பக்தர்களும்
விண் தூத சேனை சூழ்ந்திடவே - மேக
யூதர்கள் கூடி சேர்ந்தனரே
வேதமும் நிறைவேறிடுதே
இவ்வடையாளம் நோக்கிடுவோம்
இயேசுவின் நாளை சந்திக்கவே - மேக
தாமதம் ஏனோ தம் வருகை
தீவிரம் வந்தால் தம் நிலமை
காகள சத்தம் கேட்டிடுமோ
கர்த்தரைக் காண ஆயத்தமா - மேக
காலம் இனியும் சென்றிடாதே
காலையோ மாலை இராவினிலோ
நாம் நினையாத நேரத்திலோ
நம்மையும் கர்த்தர் தாம் அழைப்பார் -மேக
இந்த கடைசி காலத்திலே
இப்புவி இன்பம் தள்ளிடுவோம்
பாரங்கள் யாவும் நீக்கிடுவோம்
பேரின்ப இராஜ்யம் சேர்ந்திடுவோம் - மேக
கண்விழிப்போடு நாம் ஜெபிப்போம்
கர்த்தருக்காக காத்திருப்போம்
ஆனந்தமான நாள் நெருங்க
ஆர்ப்பரிப்போடு சென்றிடுவோம் - மேக