• waytochurch.com logo
Song # 27008

மானிட உருவில் அவதரித்த மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே


ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த

அவனியிலே உனக்காய் உதித்தார்

அண்டி வருவாய் வேண்டி அடைவாய்

அண்ணலே ஆத்தும வினை நீக்குவார் - மானிட
கூவி அழைப்பது தேவ சத்தம்

குருசில் வடிவது தூய ரத்தம்

பாவ மன்னிப்பு ஆத்ம இரட்ச்சிப்பு

பாக்கியம் நல்கிட அவரே வழி - மானிட
இயேசுவின் நாமத்தின் வல்லமையே

இதை நாடுவோர்க்கு விடுதலையே

துன்ப கட்டுகள் காவல் சிறைகள்

இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா - மானிட
அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்

அதிசயங்கள் அவர் காட்டிடுவார்

உண்மை நிறைந்த உள்ள திறந்து

உன் கர்த்தர் ஏசவை விசுவாசிப்பாய் - மானிட
கர்த்தர் உன்னை இனி கைவிடாரே

கடைசி வரை தளராதே நம்பு

என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்

ஏசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார் - மானிட

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com