• waytochurch.com logo
Song # 27014

மன்னிக்க உம்மிடமே கெஞ்சுகிறேன் நான் மறுக்காமல் ஒருவிசை மன்னித்தருளும்


நன்மை செய்ய நல் விருப்பம் உண்டு

நடத்தி முடிக்கவோ பெலன் இல்லையே

என்னில் ஓர் நன்மை இல்லை கண்டேன்

எல்லாம் உம் கிருபையால் ஆகும் என்றேன் - மன்னிக்க
பாவத்தை ஜெயிக்க வாஞ்சையுண்டு

பரிதாபம் அனுதினம் வீழ்கின்றேன் நான்

சிலுவையைப் பார்த்து உயிரடைந்தேன்

சோராமல் பயணம் தொடர்ந்திடுவேன் - மன்னிக்க
ஓயாது அலைபோல் கவலை என்னை

அயராது அணுகியே நெருங்கிடுதே

தளர்ந்து திரும்ப மனமும் உண்டு

தைரியப்படுத்தும் ஆவி தாரும் - மன்னிக்க
பேதுருவைப் போல் மறுதலித்தேன்

யூதாசைப் போல் நான் காட்டிக் கொடுத்தேன்

ஆனாலும் யேசுவே அன்பு வைத்தீர்

பரபாசாம் எந்தன் சிலுவை ஏற்றீர் - மன்னிக்க
சூழ்நிலை உந்தன் குற்றம் செய்தேன்

அமைதியின்றி சிறையில் வாழ்கின்றேன் நான்

இங்கேயும் இயேசுவே இருக்கின்றீர் நீர்

என் வாழ்வை இன்றே தந்திட்டேன் நான் - மன்னிக்க

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com