• waytochurch.com logo
Song # 27016

மதுர கீதம் பாடிடுவோம் மன்னன் இயேசுவின் நாமத்தை போற்றிடுவோம்


வானங்கள் மேலாக உயர்ந்தவரை

வாழ்த்தி புகழ்ந்து துதித்திடுவோம்

இயேசுவே வாரும் வாஞ்சை தீரும்

வார்த்தையைப் பேசும் வல்லமை தாரும் - மதுர
தூதர்கள் போற்றும் தேவன் நீரே

தீங்கொன்றும் செய்யா ராஜன் நீரே

தாகம் தீர்க்கும்ம ஜீவ ஊற்று

தம்மிடம் வருவோரை தள்ளாதநேசர் - மதுர
மாந்தர்கள் போற்றும் ராஜன் நீரே

மரணத்தை ஜெயமாக வென்றவரே

மன்னிப்பை அளித்தீர் மாந்தரை மீட்பீர்

மறுரூபமாக்கி மகிமையில் சேர்ப்பீர் - மதுர

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com