• waytochurch.com logo
Song # 27018

மங்களம் செழிக்க கிருபையருளும் மங்கள நாதனே


மங்கள நித்திய மங்கள நீ, மங்கள முத்தியும் நாதனும் நீ

எங்கள் புங்கவ நீ, எங்கள் துங்கவ நீ

உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ

அத்தனுக்கத்தனாம் ஆபிரகாம் தேவ நீ - மங்களம்
மங்கள மணமகன்

மங்கள மணமகள்

மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்

பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே உனை

துத்தியம் செய்திடும் சத்திய தேவர்க்கும் - மங்களம்
சங்கை நித்திய நாதனும் நீ

பங்கமில் சத்திய போதனும் நீ

மங்கா மாட்சிமை நீ, தங்கக் காசியும் நீ

இத்தரை இத்திரு மணத்தினிருவ ரொத்து நல்லின்பம்

உற்றவர் வாழ நடத்தியருளுமே - மங்களம்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com