• waytochurch.com logo
Song # 27021

மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு ராஜன் நம் சொந்தமாயினார்


சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார்

தூரம் போயினும் கண்டு கொண்டார்

தமது ஜீவனை எனக்கும் அளித்து

"ஜீவன் பெற்றுக் கொள்" என்றுரைத்தார் - ஆ...ஆ
எந்தசூழ்நிலையும் அவர் அன்பினின்று

என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார்

என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை

அவர் வரும்வரைக் காத்துக் கொள்வேன் - ஆ...ஆ
அவர் வரும் நாளிலே என்னைக் கரம் அசைத்து

அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக் கொள்வார்

அவர் சமூகமதில் அங்கே அவருடனே

ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன் - ஆ...ஆ

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com