• waytochurch.com logo
Song # 27022

மகிமையின் நம்பிக்கையே மாறிடாத என் இயேசையா


ஆத்துமாவின் நங்கூரமே

அழிவில்லா பெட்டகமே

நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற

நிம்மதியின் கன்மலையே - துதி
பிரகாசிக்கும் பேரொளியே

விடிவெள்ளி நட்சத்திரமே

உம் வசனம் ஏந்திக் கொண்டேன்

உலகெங்கும் சுடர்விடுவேன் - துதி
பள்ளத்தாக்கில் நடந்தாலும்

பயமில்லை பாதிப்பில்லை

உம் குரலோ கேட்குதய்யா

உள்ளமெல்லாம் பொங்குதய்யா - துதி
நல்மேய்ப்பரே நம்பிக்கையே

நானும் உந்தன் ஆட்டுக்குட்டி

உம்மைத்தானே பின் தொடர்ந்தேன்

உம்மோடுதான் நானிருப்பேன் - துதி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com