மகிமையாய் வெற்றி சிறந்த கர்த்தரை மகிழ்ந்து பாடுவேன்
கர்த்தர் என்பது அவர் நாமம்
யுத்தத்தில் வல்லவர் அவரே
கர்த்தர் என் பெலன் என் கீதமுமானார்
கரம் பிடித்து என் இரட்சிப்புமானார் - மகிமை
அமிழ்ந்ததது பார்வோனின் சேனை
ஆழி அவர்களை மூடிக்கொள்ளவே
ஆழங்களில் அமிழ்ந்து போகவே
ஆச்சரியமே அவர் செயலே - மகிமை
பெலத்தினால் சிறந்தவர் வலக்கரமே
பகைஞனை நொறுக்கி அழித்ததுவே
நீட்டினீர் மகத்துவ வலக் கரத்தை
நாட்டினீர் பரிசுத்த பர்வதத்தில் - மகிமை
கிருபையால் அழைத்த தேவனை
கரம் குவித்து நான் பாடுவேன்
துதிகளில் பயப்படத் தக்கவரை
துதி செலுத்தி நான் கெம்பீரிப்பேன் - மகிமை
தம்புரு நடனத்தோடே பாடுவேன்
தீர்க்கதரிசி மீளீயாம் போல
பெலத்தினால் வழி நடத்தினவரை
பரிகாரி என்று நான் பாடுவேன் - மகிமை