• waytochurch.com logo
Song # 27025

மகிமை மேல் மகிமை அடைந்திடுவேன் மறுரூபமாவேன் மனமதிலே


உந்தன் பாதம் என்னை பலியாய்

உண்மை மனதுடன் ஒப்படைத்தேன்

ஏற்றுக் கொண்டருளும் தேவ பெலம் விளங்கும்

தேற்றி உயிர்ப்பித்திடும் - தம் ஆவியினால் - மகிமை
தேவ சாயல் தேவ சமூகம்

தேவ பிள்ளைகள் அடையும் பாக்கியம்

எந்தன் வாஞ்சையிதே என்று சேர்ந்திடுவேன்

என்னை நிரப்பிடுமே - தம் ஆவினால் - மகிமை
ஜீவ ஜலமே பொங்கி வருதே

ஜீவ ஊற்றுகள் திறந்தனவே

தம் கரம் பிடித்தேன் அங்கு வழி நடத்தும்

தாகம் தீர்த்திடுவேன் - தம் ஆவியினால் - மகிமை
பாதம் ஒன்றே போதும் என்றேன்

பேசும் ஆண்டவர் தொனியும் கேட்டேன்

இன்ப வாக்குகளே எந்தன் போஜனமே

என்னை பெலப்படுத்தும் தம் ஆவியினால் - மகிமை
திவ்ய குணங்கள் நாடி ஜெபித்தேன்

தூய வாழ்க்கையின் தேவை அதுவே

தேவ சேவையிலே பாடு சகித்திடவே

தாரும் பொறுமை பெலன் - தம் ஆவினால் - மகிமை
ஆவி ஆத்துமா தேகம் முழுதும்

அன்பர் இயேசுவின் சொந்தமாமே

பூரணம் அருளும் ஆயத்தப்படுத்தும்

பாடிப் பறந்திடுவேன் - தம் ஆவியினால் - மகிமை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com