• waytochurch.com logo
Song # 27026

மகிமை மாட்சிமை நிறைந்தவரே மகிழ்வுடன் தொழுதிடுவோம்


உன்னத தேவன் நீரே

ஞானம் நிறைந்தவரே

முழங்கால் யாவுமே

பாரில் முடங்கிடுதே

உயர்ந்தவரே சிறந்தவரே

என்றும் தொழுதிடுவோம் - மகிமை
ஒருவரும் சேரா ஒளியில்

வாசம் செய்பவரே

ஒளியினைத் தந்துமே

இதயத்தில் வாசம் செய்யும்

ஒளிநிறைவே அருள் நிறைவே

என்றும் தொழுதிடுவோம் - மகிமை
பரிசுத்த தேவன் நீரே

பாதம் பணிந்திடுவோம்

கழுவியே நிறுத்தினீரே

சத்திய தேவன் நீரே

கனமகிமை செலுத்தியே நாம்

என்றும் தொழுதிடுவோம் - மகிமை
நித்திய தேவன் நீரே

நீதி நிறைந்தவரே

அடைக்கலமானவரே

அன்பு நிறைந்தவரே

நல்லவரே வல்லவரே

என்றும் தொழுதிடுவோம் - மகிமை
என்னையும் தேடிய தேவன்

இரக்கம் நிறைந்தவரே

முடிவில்லா வாழ்வினுக்கே

அழைத்த தேவன் நீரே

நன்றிதனை செலுத்திடுவோம்

நாளும் தொழுதிடுவோம் - மகிமை

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com