• waytochurch.com logo
Song # 27035

பெலமுள்ள நகரமாம் இயேசுவண்டை பயமின்றி ஓடி நீ வந்திடுவாய்


நிலையில்லா உலகத்தின் அலைகளாலே

அலைந்திடும் பயனென்ன புதல்வனே நீ

விசுவாசக் கப்பலிலே க்ஷேமமாக

யாத்திரை செய்பவர்க்கு லோகம் வேண்டாம்
கழுகு போல் பறந்து நீ உன்னதத்தில்

வாழ்கின்ற ஜீவியம் வாஞ்சித்துக் கொள்

காத்திருந்திடுகில் ஈந்திடுவார்

பெருக்கமுள்ள பெலன் மக்களுக்கு
மரணம் தான் வருகிலும் பயப்படாதே

விரைந்துன்னை கர்த்தர் தாம் காத்திடுவார்

யாதொன்றும் உன்னைப் பயப்படுத்த

எங்குமில்லையென்று விசுவாசிப்பாய்
ஆறுதலடையும் அந்நாடு சென்று

இயேசுவின் மார்பில் நாம் ஆனந்திப்போம்

பரம சுகம் தரும் ஊற்றுகளில்

பரனோடு நித்தியம் பானம் செய்வேன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com