பூரண ஆசீர் பொழிந்திடுமே பூரிப்போடு வாழ்ந்து வளம் பெறவே
ஆத்தும தாகம் தீர்க்க வாருமே
ஆவியில் நிறைந்து மகிழ்ந்திடவே
வல்ல அபிஷேகம் அக்கினி பிரகாசம்
சொல்லரும் சந்தோஷம் உள்ளம் ஊற்றுமே - வானம்
தேவன்பின் வெள்ளம் புரண்டுடோடுதே
தாவி மூலுகினோமே நீச்சல் ஆழமே
சக்தி அடைந்தேக பக்தியோடிலங்க
சுத்த ஜீவ ஊற்றே பொங்கிப் பொங்கி வா - வானம்
மா பரிசுத்த ஸ்தலமதிலே
மாசில்லாத தூய சந்நிதியிலே
வான் மகிமை தங்க வாஞ்சையும் பெருக
வல்லமை விளங்க துதி சாற்றுவோம் - வானம்
குற்றங் குறைகள் மீறுதல்களும்
முற்றுமாக நீங்க சுட்டெரித்திடும்
இயேசுவின் சிலுவை இரத்தமே என் தேவை
எந்தன் ஆத்துமாவை வெண்மையாக்குமே - வானம்
மேகத்தில் நான் வந்திறங்குவேன்
வேகமே ஓர் நாளே வெளிப்படுவேன்
என்றுரைத்த தேவா ஏக திவ்ய மூவா
இயேசுவே இறைவா வேகம் வாருமே - வானம்