• waytochurch.com logo
Song # 27037

பூமியின் குடிகளே புதுப்பாட்டினை பாடுங்கள் கர்த்தரின் நாமத்தை கருத்துடன


பெரியவரே நம் கர்த்தரே

ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர்

பயப்படத்தக்கவரே அவர்

வனாதி வானத்தைப் படைத்தவர்
மகிமையும் கனமும் அவருக்கே

வல்லமை மகத்துவம் அவரதே

காணிக்கையோடும் மகிமையை

அவருக்கு என்றும் செலுத்துங்கள்
பரிசுத்த அலங்காரத்துடன்

கர்த்தரை தொழுது கொள்ளுங்கள்

பூமியின் குடிகளே யாவரும்

கர்த்தர் முன்பாக நடுங்குங்கள்
வானமும் பூமியும் எழும்பட்டும்

சமுத்திர அலைகளும் முழங்கட்டும்

விருட்சங்களெல்லாம் பாடட்டும்

நாடும் களிகூர்ந்து மகிழட்டும்
ஆண்டவர் சீக்கிரம் வருகிறார்

பூமியை நியாயம் தீர்க்க வருகிறார்

பரிசுத்தவான்களும் ஆயத்தம்

ராஜாதி ராஜா வருகிறார்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com