• waytochurch.com logo
Song # 27038

பூமியின் குடிகளே எல்லோரும் கர்த்தரைப் புகழ்ந்து பாடுங்கள்


பரிசுத்தமே ஆலயத்தின்

அலங்காரமாகத் துதியுங்கள்

பரிசுத்தவான்களின் சபையினிலே

துதி விளங்க துதியுங்கள் - பூமி
ஆனந்தத்தின் சத்தத்தோடே

சந்நிதி முன்னே வாருங்கள்

அல்லேலூயா ஜெயத் தொனியோடே

கர்த்தரைப் புகழ்ந்து பாடிடுங்கள் - பூமி
மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு

ஆராதனை செய்திடுங்கள்

ஆவியாலே நிறைந்தோராய்

புதுப்பாட்டை பாடிடுங்கள் - பூமி
பயத்துடனே கர்த்தருக்கு

ஆராதனை செய்திடவே

கர்த்தரின் கிருபைகளை

பற்றிக் கொண்டே ஆராதிப்போம் - பூமி
தம்புரோடும் வீணையோடும்

கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்

ஓசையுள்ள கைத்தாளத்தோடே

தேவாதி, தேவனைத் துதியுங்கள் - பூமி

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com