• waytochurch.com logo
Song # 27042

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி மானிடர் புகழ்


மாட்டுத் தொழுவம் தெரிந்தெடுத்தார்

மா தேவ தேவனே

மேன்மை வெறுத்தார் தாழ்மை தரித்தார்

மா ஜோதியாய் வளர்ந்தார் - பிறந்தார்
பாவ உலக மானிடர் மேல்

பாசம் அடைந்தவரே

மனக்காரிருளை எம்மில் நீக்கிடும் மெய்

மா ஜோதியாய்த் திகழ்ந்தார் - பிறந்தார்
பொறுமை தாழ்மை, அன்புருக்கம்

பெருந்தன்மை உள்ளவரே

மரணம் வரையும் தன்னைத் தாழ்த்தினதால்

மேலான நாமம் பெற்றார் - பிறந்தார்
கந்தைத் துணியோ கர்த்தருக்கே

கடும் ஏழ்மைக் கோலமதோ

விலையேறப் பெற்ற உடை அலங்கரிப்பும்

வீண் ஆசையும் நமக்கேன் - பிறந்தார்
குருவைத் தொடரும் சீஷர்களும்

குருபோல மாறிடுவார்

அவர் நாமம் தரித்தவர் யாவருமே

அவர் பாதையில் நடப்போம் - பிறந்தார்
இயேசு பிறந்தார் உள்ளமதில்

இதை எங்கும் சாற்றிடுவோம்

புசிப்பும் குடிப்பும் தேவ ராஜ்யமல்ல

பரன் ஆவியில் மகிழ்வோம் - பிறந்தார்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com