பாவ சஞ்சலத்தை நீக்க ப்ராண சிநேகிதருண்டே பாவ பாரம் தீர்ந்துபோக மீட்பர்
கஷ்ட நஷ்ட முண்டானாலும் இயேசுவண்டை சேருவோம்
மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபங் காட்டுவோம்
நீக்குவாரே நெஞ்சின் நோவை, பெலவீனம் தாங்குவார்
நீக்குவாரே மனச்சோர்வை, தீயகுணம் மாற்றுவார்
பெலவீன மானபோது, கிருபாசனமுண்டே
பந்து ஜனம் சாகும்போது, புகலிடம் இதுவே
ஒப்பில்லாத ப்ராணநேசா! உம்மை நம்பி நேசிப்போம்
அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்