பாரீர் அருணோதயம் போல் உதித்து வரும் இவர் யாரோ
காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதிமதுரம் - இயேசுவே
அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தாங்குகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கொடி நேசமே - இயேசுவே
என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே
என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேனே அந்நேரமே - இயேசுவே
நாம் மகிழ்ந்து துதித்திடுவோம்
ஆட்டுக் குட்டியின் மண நாளிலே
சுத்த பிரகாச ஆடையோடே
பறந்திடுவோம் நாம் மேகத்தில் - இயேசுவே