பாரக் குரசில் பரலோக ராஜன் பாதகனைப் போல் தொங்குகிறாரே
இதயத்தின் பாரம் அறிந்து மெய்யான
இளைப்பாறுதலை அறித்திடுவாரே
இன்னுமென்ன தாமதமோ
இன்றே இரட்சிப்படைய வருவாய் - வந்தி
சிலுவையின் மீதில் சுமந்தனரே உன்
சாப ரோகங்கள் தம் சரீரத்தில்
சர்வ வல்ல வாக்கை நம்பி
சார்ந்து சுகம் பெறவே வருவாய் - வந்தி
நித்திய வாழ்வு பெற்றிட நீயும்
நித்திய ஜீவ ஊற்றண்டை வாராய்
நீசனென்று தள்ளாதுன்னை
நீதியின் பாதையில் சேர்த்திவார் - வந்தி
இயேசுவின் நாமம் ஊற்றுண்ட தைலம்
இன்பம் அவரின் அதரத்தின் மொழிகள்
இல்லையே இந்நேசரைப் போல்
இகமதில் வேறோர் அன்பருனக்கே - வந்தி