• waytochurch.com logo
Song # 27059

பாக்கியமே பெரும் சிலாக்கியமே இயேசுவின் சேவை பாக்கியமே


எட்டுத் திக்கும் இயேசுவை அறிந்திடவே

எழும்பியே சேவை புரிந்திடுவோம்

எதிர்த்து நிற்கும் சேனை வென்று

இயேசுவால் ஜெயமே ஏகிடுவோம் - பாக்கியமே
அழைப்பினை உணர்ந்து சேவை செய்வோம்

அயராது அவரன்பை கூறிடுவோம்

வல்லமை யாவும் அளித்திவார்

வல்லவர் இயேசுவை சாற்றிடுவோம் - பாக்கியமே
ஆத்தும தரிசனம் கண்டிடுவீர்

ஆண்டவர் வார்த்தையை உணர்ந்திடுவீர்

திறந்த வாசல் அடைபடுதே

அதிக வேகம் சேவை செய்வோம் - பாக்கியமே
அழுகையும் புலம்பலும் தொனிக்கின்றதே

அன்பரே தீவிரம் வருகின்றாரே

வேதம் நிறைவேறும் காலமிதே

சேவை புரிந்தே ஏகிடுவோம் - பாக்கியமே
சபைதனில் ஒரு மனம் காத்திடுவோம்

பலமுள்ள தூண்களாய் விளங்கிடுவோம்

அழிந்திடும் மாந்தரின் சேவைக்கென்றே

அன்பரின் பாதம் படைத்திடுவோம் - பாக்கியமே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com