• waytochurch.com logo
Song # 27064

பல்லவி ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்


சேற்றினின் றென்னை தூக்கி யெடுத்து

மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே

கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை

கண்டு நன்றியுடன் பாடிடுவேன் - ஆனந்தமாய்
வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்

வாஞ்சையுடன் என்னைத்தேடி வந்தார்

எதற்குமே உதவா என்னையும் கண்டெடுத்தார்

இயேசுவின் அன்பை நான் என் சொல்லுவேன்

ஆனந்தமாய்
கர்த்தரின் சித்தம் செய்திட நித்தம்

தத்தம் செய்தே என்னை அர்ப்பணித்தேன்

இயேசு அல்லால் ஆசை இப்பூவினில் வேறே இல்லை

என்றும் எனக்கவர் ஆதரவே - ஆனந்தமாய்
உம்மைப் பின்சென்று ஊழியம் செய்து

உம்பாதம் சேர்ந்திட வாஞ்சிக்கிறேன்

தாரும் தேவா ஏழைக்கும் மாறாத உம்கிருபை

கண்பாரும் என்றும் நான் உம் அடிமை - ஆனந்தமாய்
தேற்றிடுதே உம் வாக்குகள் என்னை

ஆற்றிடுதே உந்தன் சமூகமே

பெலத்தின் மேல் பெலனடைந்து நான் சேருவேன்

பேரின்ப சீயோனில் வாழ்ந்திடவே - ஆனந்தமாய்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com