பரிசுத்தர் இயேசு உயிர்த்தெழுந்தார் புகழ் செலுத்தி மகிழ்வோம்
சடுதி பூமி அதிர்ந்ததே
சரீரம் வைத்த கல்லறை
அற்புதமாகத் திறந்திடவே
ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார்
தேவனின் வல்ல செயலிதுவே
தேவனால் கூடாததொன்றுமில்லை
கலங்கிடாமல் நம்பிடுவோம்
கைவிடமாட்டார் கடைசி வரை - பரிசுத்தர்
அழிவைக் காணார் பரிசுத்தர்
அகல பாதாளம் வென்றார்
பூமியிலே தாழ்விடங்களிலே
புண்ணியராக இறங்கினாரே
சிறைப் பட்டவரை சிறையாக்கி
சிறந்த வரங்கள் அளித்தாரே
வானாதி வானம் ஏறினாரே
வலது பாரிசம் வீற்றிடவே - பரிசுத்தர்
பரிசுத்தாவி பெலத்தினால்
மரித்தவர் எழுந்தாரே
சரீரமாம் தம் திருச்சபை மேல்
சத்திய ஆவி பொழிந்தனரே
ஆவியால் தேவன் இறங்கிடவே
ஆவியால் தேகம் நிரம்பிடுதே
ஆகமதில் உலவுகின்றார்
ஆனந்த பாக்கியம் அடைகிறோமே - பரிசுத்தர்
பரம சீயோன் சேருவோம்
மரணமோ நம் ஜீவனோ
கடைசி நேரம் கேட்டிடுவோம்
எக்காள சத்தம் முழங்கிடுமே
கிறிஸ்துவுக்குள்ளே மரித்தவர்கள்
கல்லறை திறக்க எழும்பிடவே
மறுரூபம் கண்ணிமைப் பொழுதே
மகிமை அடைந்தே பறந்து செல்வோம்